×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்


திருப்பூர்,  செப். 27: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய  ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய  பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக  துவங்க வேண்டும். மின் வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை  நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியத்திற்கு சொந்தமான வட  சென்னை அனல் மின் நிலையம் அலகு-3-ன் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை  முழுவதுமாக அயல்பணி ஒப்படைப்பு முறையை கைவிட வேண்டும்.

மின்வாரியத்திற்கு  சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள தரவுகளை தனியார் ஏஜென்சியிடம்  ஒப்படைக்கக்கூடாது. நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு மற்றும்  ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படி வழங்கிட வேண்டும். தரமான  தளவாட பொருட்கள் தடையின்றி தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின்  கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், திருப்பூர் பிஎன் ரோட்டில் உள்ள  மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை  முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும்  மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Power Board ,Tirupur ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்