முகாமில் ஒரே நாளில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஊட்டி, செப். 27:  நீலகிரி மாவட்டத்தில் நடந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பொது இடங்கள், சுற்றுலா தலங்கள் உட்பட 1364 மையங்களில் நடைபெற்றது. 60 நடமாடும் முகாம்கள் மூலம் வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்கள், காய்கறி மற்றும் தேயிலை தோட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 5 ஆயிரத்து 700 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

இம்முகாமில் முதல் டோஸ் 18 வயதிற்கு ேமற்பட்டோர் 331 பேருக்கு செலுத்தப்பட்டது. 2வது டோஸ் 18 வயது மேற்பட்டோருக்கு 2 ஆயிரத்து 950 பேருக்கு செலுத்தப்பட்டது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டோர் 14 ஆயிரத்து 481 பேருக்கும், 60 வயதிற்கு மேற்பட்டோர் 1079 பேருக்கும் செலுத்தப்பட்டது. இம்முகாமில் மொத்தம் 18 ஆயிரத்து 841 பேருக்கு செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த முகாமில் பூஸ்டர் டோஸ் அதிகம் பேருக்கு செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5 லட்சத்து 94 ஆயிரத்து 507 பேரும், இரண்டாவது தவணை 5 லட்சத்து 95 ஆயிரத்து 983 பேரும் என மொத்த தடுப்பூசி செலுத்திேயார் எண்ணிக்கை 11 லட்சத்து 90 ஆயிரத்து 490 ஆக உள்ளது.

Related Stories: