×

குடிபோதையில் தூங்கிய முதியவர் மாடியிலிருந்து தவறி விழுந்து பலி: போலீசார் விசாரணை

ஆவடி, செப்.27: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாரவிவர்மன்(50). இவர், ஆவடி பருத்திப்பட்டு அருகே கீரின் சிட்டி பகுதியில் தங்கியவாறு, அப்பகுதியில் நடைபெறும் தனியார் பள்ளி கட்டுமான பணியில் கடந்த மூன்று நாட்களாக கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்த பிறகு, இரண்டாவது தளத்தில் அமர்ந்து மது அருந்தினார். பின்னர், அங்கேயே படுத்து உறங்கினார். இந்நிலையில், அங்கு கைப்பிடி சுவர் இல்லாத காரணத்தினால், போதையில் இவர் 40 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். நேற்று காலை பணிக்கு வந்த சக தொழிலாளிகள் ராஜாரவிவர்மன் உயிரிழந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர்,  இதுகுறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Tags :
× RELATED புழல் சிறையில் நன்னடத்தை காரணமாக 5 கைதிகள் விடுதலை