எளாவூர் சோதனைச்சாவடியில் 21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி, செப்.27: அரசு பேருந்தில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைசாவடி பகுதியில் நேற்று முன் தினம் இரவு  ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தை மடக்கினர். அதில் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பின்பக்க சீட்டுக்கு அடியே மறைத்து வைத்து, 2 பைகளில் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், மதுரையை சேர்ந்த மாசாணம் (35), பழைய தாராபுரம் ரோடு, பழனியை சேர்ந்த பரத்குமார் (28) என்பது தெரியவந்தது.இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, 2 பேரை கைது செய்தனர்.

Related Stories: