காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது

காஞ்சிபுரம், செப். 27: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்குகிறது. மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இம்மாதம் (நேற்று முன்தினம்) 25ம் தேதி கோயில் நவராத்திரி விழா தொடங்கியது. காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதைதொடர்ந்து, வளாகத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில் அனுக்கை சண்டி ஹோமத்துடனும், காப்புக்கட்டு உற்சவத்துடனும் தொடங்குகிறது. அன்றைய தினமே கோயில் வளாகத்திற்குள் உள்ள நவராத்திரி மண்டபத்துக்கு உற்சவர் காமாட்சி அம்மன் சரஸ்வதி லட்சுமி தேவியருடன் எழுந்தருள்கிறார். தேதியிலிருந்து தினசரி இரவு காமாட்சி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தினசரி இரவு சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. நவராத்திரி விழாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

மேலும், விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேசன், ஸ்தானிகர் நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரி, நிர்வாக அலுவலர் தியாகராஜன் மற்றும் கோயில் ஸ்தானீகர்களும் செய்து வருகின்றனர்.

Related Stories: