கார் விபத்தில் 2 காவலர்கள் படுகாயம்

மாமல்லபுரம், செப். 27: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்றுமுன்தினம் மாமல்லபுரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் சிறப்பு எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த பைக்குகளை தடுத்து நிறுத்தி, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாமல்லபுரம் நோக்கி வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்தது.

அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் மீது கார் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், போக்குவரத்து பிரிவு காவலர் யோகேஸ்வரன் (26), சிறப்பு காவல் படை வீரர் சுரேஷ்குமார் (22) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இருவரையும் சக போலீசார் மீட்டு, கோவளத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில், மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: