உத்திரமேரூர் அருகே நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு

உத்திரமேரூர், செப். 27: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் செயல்பட்டு வரும் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தூய்மை பாரத இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக் கொள்வது, வீடு மற்றும் கல்லூரிகளில் மழை நீர் தேங்கா வண்ணம் பாதுகாத்துக் கொள்ளவது மற்றும்  பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம். மஞ்சப்பைகளை பயன்படுத்துவோம் என மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்த கல்லூரி மாணவ - மாணவியர்கள் கல்லூரி முழுவதும் தூய்மைபடுத்தினர். பின்னர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது

Related Stories: