100 நாள் திட்டத்தில் தினமும் வேலை

கரூர், செப். 27: கரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தும்பிவாடி பகுதியை சேர்ந்த மக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தும்பிவாடி பகுதியில் வசித்து வருகிறோம். ஏழ்மை நிலையில் உள்ளோம். 100 நாள் வேலை திட்டத்தில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 6 வாரம் வேலை செய்தோம்.எனவே, எங்கள் பகுதி மக்களுக்கு தினமும் வேலை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: