×

பெரம்பலூரில் குறை தீர் நாள் கூட்டம் கோரிக்கை மனுக்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை

பெரம்பலூர், செப். 27: பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீ வெங்கடப்பிரியா தலைமையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 205 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா தலைமையில் நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (26ம் தேதி) நடைபெ ற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது : பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடி வந்து பொதுமக்கள் தரும் மனுக்களை உரிய ஆய்வுக்கு உட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 205 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத் தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லலிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா