முத்துப்பேட்டையில் பரபரப்பு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணி சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டு

திருவாரூர்,செப்.27: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 157 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணியை சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களை கலெக்டர் பாராட்டினார். திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமானது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில்டிஆர்ஓ சிதம்பரம், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் கண்மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை,ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்வி கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மொத்தம் 157 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடியாக குறித்த காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.மேலும் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 23 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை பாராட்டி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.

Related Stories: