பாமக செயற்குழு கூட்டம்

பழநி, செப்.27: மஞ்சப்பை திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டுமென பழநியில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழநியில் பாமக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக அரசு மஞ்சப்பை திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேணடும். பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். பழநி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் துவக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், ஆயக்குடி மற்றும் நெயக்காரப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: