ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பழநி, செப்.27: ஒன்றிய அரசை கண்டித்து பழநியில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு முற்றிலும் கைவிட வேண்டும். பாலிசிகளுக்கு போனசை உயர்த்திக் கொடுக்க வேண்டும். பணிக்கொடை மற்றும் குழுக்காப்பீட்டை உயர்த்தி கொடுக்க வேண்டும். முகவர் தொழிலை முறையாக அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநியில் எல்ஐசி முகவர்கள் சங்க மதுரை கோட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

எல்ஐசி முகவர்கள் சங்க தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஆவுடைதங்கம், பொருளாளர் நடராஜன், அலுவலக ஊழியர் சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: