பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்

ஆர்.எஸ்.மங்கலம், செப்.27: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரிலுள்ள அமிர்தா மெட்ரிக் பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பாக பெண் குழந்தைகளுக்கான நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணை ஆளுநர் பாபு கலந்து சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் அன்பு மலர் அனைவரையும் வரவேற்றார். மேலும் ராம்நாட் ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் தலைவர் ரம்யா தினேஷ் சிறப்பு கருத்துரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நெகிழி ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து மாணவ,மாணவிகளுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் தலைவர் ஜோதி, ராம்நாட் ஈஸ்ட் கோஸ்ட் பட்டய தலைவர் தினேஷ், செயலர் சாகாத் இளவரசன் உட்பட ஆசிரியைகள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories: