ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி உற்சவம்

ராமேஸ்வரம், செப்.27: ராமேஸ்வரம் கோயில் நவராத்திரி உற்சவம் நேற்று மாலை துவங்கியது. பர்வதவர்த்தினி அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் கொலுவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று நவராத்திரி உற்சவத் திருவிழா துவங்கியது. இதையொட்டி நேற்று கோயில் அம்பாள் சன்னதியில் ஸ்ரீ சக்கரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் நவராத்திரி உற்சவம் துவங்கியது.

இதையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளி கொலுவில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெண்களும் சிறுவர்களுமாக ஏராளமான பக்தர்கள் அம்பாளை தரிசித்து கொலுவில் வைக்கப்பட்டிருந்த தத்ரூபமான கொலு பொம்மைகளை பார்த்து ரசித்தனர்.நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மாலை பர்வதவர்த்தினி அம்பாள் மகாலெட்சுமி அலங்காரத்தில் கொலுவில் எழுந்தருளல் நடைபெறும்.

Related Stories: