ஜிஹெச் பிரசவ அறையில் தீ விபத்து

ராமநாதபுரம், செப்.27: ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிரசவ அறை பழைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தற்போது பயன்பாட்டில் இல்லை. இந்த அறையில் அகற்றப்படாமல் உள்ள ஏசி சாதனத்தில் நேற்று மாலை கரும் புகை கிளம்பியது. இது குறித்த தகவல் கிடைத்த ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு சென்று அறையை திறந்து கரும்புகையை வெளியேற்றினர்.

Related Stories: