×

குறைதீர்க்கும் கூட்டத்தில் தீர்வு காணாத மனுக்களுக்கு காரணம் தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரம்,செப்.27: ராமநாதபுரத்தில் ஒரே கோரிக்கை தொடர்பான மனு மீண்டும், மீண்டும் வருவதை தவிர்க்க தீர்வு காணப்படாத மனுக்களுக்கு உரிய காரணத்தை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார். ராமநாதபுரத்தில் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து 296 மனுக்கள் பெற்று கொண்டார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்கள் தொடர்பாக மனுதாரரின் முன்னிலையில் விசாரித்தார்.

துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும். தீர்வு காணா முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களுக்கு உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும். இதனால், ஒரே கோரிக்கை தொடர்பான மனுக்கள் மீண்டும், மீண்டும் வருவதை தவிர்க்கலாம் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர்(பொ) குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...