×

ஊட்டச்சத்து மாத விழா

தேவகோட்டை, செப்.27: போஷான் அபியான் திட்டத்தின் கீழ் செப்.1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தேவகோட்டை முகமதியர் பட்டினம் நகராட்சி திருமண மண்டபத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீராஉசேன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆறு மாத குழந்தை முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மேம்படுத்தும் விதமாக உணவு தானிய வகைகள், பருப்பு வகைகள், அரிசி வகைகள், கிழங்கு வகைகள், கீரை, காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தையுடன் பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nutrition Month ,
× RELATED கேளம்பாக்கத்தில் ஊட்டச்சத்து மாத விழா