×

மோதல்களை தூண்டுகின்ற சுவரொட்டி அச்சிட கூடாது: அச்சக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

தேவகோட்டை, செப்.27: சாதி, மத, இன உணர்வுகளை தூண்டுகின்ற வகையில் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் அச்சிட கூடாது என அச்சக உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை தடுப்பது தொடர்பாக தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆலோசனைப்படி நகர் காவல் நிலையத்தில் அச்சக உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் சாதி மத இன உணர்வுகளை தூண்டுகின்ற வகையில் சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் அச்சிட கூடாது, வன்முறையை தூண்டுகின்ற ஆபாசமான படங்கள், வார்த்தைகள் இடம்பெறும் வகையில் அச்சிட கூடாது, அச்சிடப்படும் சுவரொட்டி, துண்டு பிரசுரங்களில் அச்சிட சொன்னவர் பெயர் கைபேசி எண், அச்சகத்தின் பெயர், அதன் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். இதை கட்டாயம் அச்சக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் போன்ற பல்வேறு வழிமுறைகளை கூட்டத்தில் எடுத்துரைத்தனர். இதில் அச்சக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...