3.5 கிலோ குட்கா விற்ற தந்தை, மகன் கைது

சேலம், செப். 24: சேலம் மணியனூர், நெத்திமேடு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக, அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன்பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணியனூரில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற முகமது இமாம்தீன் (57), அவரது மகன் முகமது அஸ்பர் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 3.5கிலோ அளவிலான 358 குட்கா உள்ளிட்ட போதை பொருட்களையும், ₹2ஆயிரம் பணம், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: