2,690 மையங்களில் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்

சேலம், செப். 24: சேலம் மாவட்டத்தில் 38வது தவணையாக 2,690 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (25ம்தேதி) நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் 60,25,127 பேருக்கு முதல் தவணையும், 2ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் 97சதவீதம் பேருக்கு முதல் தவணை, 89 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,49,268 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, நாளை (25ம் தேதி) 38வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம், காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை நடத்தப்படுகிறது. ஊரகப்பகுதியில் 2,315 மற்றும் மாநகராட்சி பகுதியில் 375என்று மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்களில் முகாம் நடக்கிறது. இதில், 15,500க்கு மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: