கிராம வங்கி ஊழியர்கள் போராட்டம்

சேலம், செப்.24: கிராம வங்கிகளின் பங்குகளை சந்தைப்படுத்தி தனியாருக்கு விற்பதை கண்டித்து தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சேலம் நீதிமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம வங்கி ஆபீசர்ஸ் அசோசியேசன் தலைவர் அண்டோகால்பர்ட் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராமவங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் பரிதிராஜா, பொதுச்செயலாளர் அஸ்வத் மற்றும் ஆபீசர்ஸ் அசோசியேசன் பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி, வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் ராஜேந்திரன், தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராம வங்கிகளின் பங்குகளை சந்தைப்படுத்தி தனியாருக்கு விற்கக்கூடாது. ஸ்பான்சர் வங்கிகளின் பிடியில் இருந்து கிராம வங்கிகளை விடுவித்து தேசிய கிராம வங்கியை உருவாக்க வேண்டும். மித்ரா கமிட்டியின் அடிப்படையில் அனைத்து கிராம வங்கிகளிலும் பதவி உயர்வுகளும், புதிய பணி நியமனங்களும் செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்னும் உச்சநீதிமன்றம் ஆணைக்கு இணங்க தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய வழங்க வேண்டும்.

வணிக வங்கிகளில் உள்ளதைபோல் கருணை அடிப்படையில் பணி நியமனங்களை 5.8.14 முதல் வழங்க வேண்டும். 11வது இருதரப்பு ஒப்பந்தத்தை முழுமையாக கிராம வங்கிகளில் அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,’’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: