பிரதோஷ வழிபாடு

ராசிபுரம், செப்.24: ராசிபுரம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கைலாசநாதர் கோயில் உள்ளது. புரட்டாசி மாதத்தின் முதல் பிரதோஷ நாளான நேற்று, கைலாசநாதருக்கு நேர் எதிரே உள்ள நந்திக்கு பால் மற்றும் மஞ்சளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்தி மீது அமர்ந்து கைலாசநாதர்-தர்மசங்கர்த்தினி அம்மையார் பிரகார உலா வந்தனர்.

சிறப்பு பூஜையின் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, பட்டணம், புதுப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: