ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 58 பேர் கைது

திருச்செங்கோடு, செப்.24: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் மாணவர்கள் இருவரை, அதே பகுதியைச் சேர்ந்த வணிகர் சங்க தலைவர் தங்கமணி, அவரது மகன் பூபாலன் மற்றும் நண்பர் சேகர் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு வாரம் ஆகியும் அவர்களை கைது செய்யாததை கண்டித்து, ஆதித்தமிழர் பேரவையினர் பெரியமணலி நான்குரோடு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். டிஎஸ்பி.,க்கள் பழனிச்சாமி, மகாலட்சுமி, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் குலசேகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தடையை மீறி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த 8 பெண்கள் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்சில் ஏற்றிச்சென்று திருச்செங்கோடு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Related Stories: