முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

நல்லம்பள்ளி, செப்.24: நல்லம்பள்ளியில் செயல்பட்டு வரும்  விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது. விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்து பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக, தர்மபுரி டிஎஸ்பி வினோத் கலந்து கொண்டு, மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கக் கூடிய சமூக வலைதளங்களை தவறான முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையை அழித்துக் கொள்ளாமல், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அலுவலர் விக்ரமன், கல்லூரி முதல்வர் பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: