பச்சமுத்து ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தர்மபுரி, செப்.24: தர்மபுரி பச்சமுத்து ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில், நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். துணை தலைவர் சங்கீத்குமார், இயக்குனர் பிரியா சங்கீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக, தர்மபுரி சுகாதாரத்துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள், ஓசூர் மக்கள் நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, 2018- 2021ம் ஆண்டு வரை படித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ரகுநாதன், கல்லூரி மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: