சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் கைது

தர்மபுரி, செப்.24: பொம்மிடி வேகடஅள்ளி காளியூர் காந்தி நகர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னன்(67). இவரது பெட்டிக்கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுமி, வேர்க்கடலை வாங்க சென்றார். அப்போது, பொன்னன் சாக்லெட் தருவதாக கூறி, சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து அழுதபடியே வீட்டுக்கு வந்து, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்த அளித்த புகாரின் பேரில், பொம்மிடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, பொன்னனை கைது செய்தனர்.

Related Stories: