×

நேர்மையான நகராட்சி ஊழியருக்கு பாராட்டு

மானாமதுரை, செப்.24: மானாமதுரை நகராட்சியில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வருபவர் ஆசிக் உமர். இவர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே கிளம்பிய போது வாசல் அருகே தங்க மோதிரம் ஒன்று கிடந்தது. அக்கம் பக்கம் விசாரித்தபோது, யாரும் உரிமை கோராததால் அந்த மோதிரத்தை எடுத்து சென்று மானாமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தார். ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 3.5 கிராம் எடையுள்ள அந்த மோதிரத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஆசிக் உமரை நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...