×

குறுவட்ட விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

சிவகங்கை, செப்.24: சிவகங்கை குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் அலவாக்கோட்டையில் நடைபெற்றது. இதில் சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர். மாணவி மேனகா 19 வயது பிரிவு தடகளத்தில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் பிரிவில் வாலிபால் 17, 19 வயது பிரிவில் முதலிடமும், 14 வயது பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர். த்ரோபால் 14, 17, 19 வயது அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்றனர். கபடி 17 வயது பிரிவில் இரண்டாமிடமும், இறகுப்பந்து 19 வயது பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனர்.

தடகளம் ஆண்கள் 14 வயது பிரிவில் லட்சுமணன், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் இரண்டாமிடமும், கிருஷ்ணகுமார் வட்டு எறிதலில் இரண்டாம் இடமும் பெற்றனர். 17 வயது பிரிவில் சஞ்சய் 110மீ தடை தாண்டுதலில் முதலிடமும், வல்லவராஜ் குண்டு எறிதல், வட்டு எறிதலில் முதலிடமும், சந்தோஷ்குமார் ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும், ஹரிபாஸ்கர் 400மீ ஓட்டத்தில் முதலிடமும், 11ம் வகுப்பு அதிகுந்தன் 400 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.

தடகளம் பெண்கள் 14 வயது பிரிவில் 400 மீ தொடர் ஓட்டத்தில் பொன்கமல் சுபாஷினி, மஞ்சுதா, வர்ஷினி, பவி முதலிடம் பெற்றனர். மேனகா வட்டு எறிதலில் முதலிடமும், மும்முறை தாண்டுதலில் முதலிடமும், ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முத்துக்கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...