×

பிரதோஷ விழா

திருப்புத்தூர் செப்.24: திருப்புத்தூர் சிவகாமி உடனய திருத்தளிநாதர், யோகா பைரவர் கோயிலில் நேற்று மாலை பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரர் பெருமானுக்கும் 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருத்தளிநாதருக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

திருத்தளிநாதரும், சிவகாமி அம்மனும் பிரதோஷ மூர்த்திகளாக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர் பிரதோஷ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...