×

பள்ளிக்குள் புகுந்த 7 அடி கருநாகம்

கமுதி, செப்.24: கமுதியில் பள்ளிக்குள் 7 அடி நீள கருநாகம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கமுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இங்குள்ள விளையாட்டு திடலுக்கு நேற்று மாலை 7 அடி நீள கருநாகம் வந்தது. இதை பார்த்த மாணவிகள் அலறியடித்து ஓடினர். பின்னர் பாம்பு பழைய பொருட்கள் போட்டு இருக்கும் இடத்தின் அருகே குழிக்குள் சென்றது. இதனையடுத்து கமுதி தீயணைப்புத் துறையினருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது.

நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையில் வந்த வீரர்கள் பாம்பு சென்ற குழி உள்ள இடத்தில் மண்ணெண்ணெய் மற்றும் பினாயில் ஊற்றினர். இதையடுத்து கொடிய விஷம் உள்ள 7 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பு வெளியில் வந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்து காட்டில் விட்டனர். இதனால் பள்ளி மாணவிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...