×

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

ராமநாதபுரம், செப்.24: ராமநாதபுரம் அருகே பனைக்குளம் பஹ்ருதீன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை உதவி தலைவர் முஹமது ரோஸ் சுல்தான் தலைமை வகித்தார். முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி முன்னிலை வகித்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்லத்தாய், பனைக்குளம் ஊராட்சி தலைவர் பெளசியா பானு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் தலைமையில், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பேரின்பம், ஊராட்சி தலைவர் குயின் மேரி ஆகியோர் வழங்கினர். ஊராட்சி வார்டு உறுப்பினர் முருகேசன், பள்ளி மேலாண் குழு தலைவர் ட்ரீஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...