×

வேளாண் இடுபொருட்கள் மானிய விலையில் பெறலாம்

திருவாடானை, செப்.24: மானிய விலையில் வேளாண் இடுபொருட்களை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாடானை வேளாண்மை துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். திருவாடானை வேளாண்மை உதவி இயக்குனர் உமா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாடானை வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக வேளாண் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்குவதற்காக நெல் விதை ஆர்என்ஆர்-32 டன், கோ 52-1 டன், உளுந்து 3,200 கிலோ,

இராகி -1100 கிலோ, குதிரைவாலி- 500 கிலோ, நெல் நுண்ணூட்டம்-5700 கிலோ, திரவ உயிர் உரங்கள்- 500 லிட்டர், சிறுதானிய நுண்ணூட்டம்-1500 கிலோ ஆகிய இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே மானிய விலையில் வாங்கி விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED முதல்வரின் மருத்துவ காப்பீட்டு...