×

பள்ளிப்பட்டு அருகே விவசாய நிலத்தை சர்வே செய்ய 2 ஆண்டுகளாக அலைக்கழிப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு

திருத்தணி,செப்.24: விவசாய நிலம் சர்வே செய்ய இரண்டு ஆண்டுகளாக அலங்கரிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கீச்சலம் வி. பி. என். கண்டிகை கிராமத்திற்கு அருகில்  பகுதியில்  வாய்க்கால் செல்கிறது. அதன் அருகில்  கிருஷ்ணம்மாள் என்ற பெண் விவசாயிக்கு சொந்தமான விவசாய நிலத்தை சர்வே செய்து தர வேண்டும் என்று பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனு வழங்கினார். இருப்பினும் இதுவரை சர்வே செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வாய்க்கால் ஒட்டி உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துளுக்காக புகாரின் பேரில் வருவாய் துறையினர் இரண்டு நாட்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றினர். அப்போது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள தென்னை செடிகள் மா செடிகள் உட்பட பல்வேறு செடிகள் அகற்றப்பட்டது. உரிய முறையில் ஆக்கிரமிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் உடனடியாக விவசாய நிலம் சர்வே செய்து வழங்க வேண்டும் என்றும் மேலும் நீர் வாய்க்கால்  தூர்வாரி கரை வலுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Pallipattu ,
× RELATED பள்ளிப்பட்டு பேரூராட்சியில்...