கலைஞர் பிறந்தநாள் கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்

செங்கல்பட்டு, செப். 24: தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பெற்று  போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை செங்கல்பட்டு  மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று  வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கலைஞர்  பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கிடையே  பேச்சு போட்டி  3.6.2022 அன்றும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கிடையே  பேச்சு போட்டி  29.7.2022 அன்றும் நடத்தி முடிக்கப்பெற்றது.  மேலும், தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் 6.7.2022 அன்று நடத்தி முடிக்கப்பெற்றது.

கலைஞர் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் மதுராந்தகம், இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் சு. கோகுல்தாஸ், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் பல்லாவரம், புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி க. கவிபிரியா மற்றும்  மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் நந்திவரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி யு.யுவஸ்ரீ  பெற்றுள்ளனர். மேலும், அரசு பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக தொகை ரூ.2 ஆயிரம் ஜமீன் பல்லாவரம், நகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன்  சு.சந்தோஷ்  மற்றும் குண்ணங்குளத்தூர், அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி   சி.ஹேமபிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவன் க.சங்கர்பாபு, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த  மாணவன் ஜெ.பெரோஸ் ஷெரிம்,  மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் படூர், இந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த மாணவி ஜெ. ஜனனி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Related Stories: