மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

திருப்பூர், அக்.24:  திருப்பூர் மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.  இந்த மாதத்தில் 4, 11 மற்றும் 18ம் தேதி என தொடர்ந்து 3 வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், இம்மாதத்துக்கான கடைசி முகாம் நாளை(25ம் தேதி) நடக்கிறது. 38ம் கட்ட மெகா முகாம் 1,341 இடங்களில் நடக்கிறது. 2,681 பேர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இதுவரை பூஸ்டர் செலுத்தி கொள்ளாதவர்களுக்கு வசதியாக வரும் 25ம் தேதி 38வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் 18 வயதை கடந்த இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இம்மாதம் 30ம் தேதிக்கு பின் பூஸ்டர் இலவசமாக செலுத்தப்படாது. எனவே 25ம் தேதி முகாமை மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: