ரூ.61 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில், செப்.24:  வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது. பஞ்சப்பட்டி, பெரியமஞ்சுவழி, ஆலாவலசு, வேடசந்தூர், கரையூர், சீதாப்பட்டி, தாழையூத்து உள்ளிட்ட பகுதியிலிருந்து 160 விவசாயிகள் 2348 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.  மொத்த எடை 1 லட்சத்து 15 ஆயிரம் கிலோ ஆகும்.

விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடீஸ்வரன் முன்னிலையில் நடந்த ஏலத்தில், ஈரோடு, முத்தூர், காரமடை, நடுப்பாளையம், காங்கயம், கொடுமுடி பகுதியைச் சேர்ந்த 10 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒரு கிலோ விதை அதிகபட்சமாக ரூ.57.27க்கும், குறைந்தபட்சமாக ரூ.45.33க்கும் விற்பனையானது. மொத்தம் 61 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது.

Related Stories: