லாட்டரி, கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருப்பூர்,செப்.24: திருப்பூர் பிஎன் ரோடு பாண்டியன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று ரோந்து மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (24) என்பது தெரியவந்தது. மேலும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அனுப்பர்பாளையம் எஸ்ஏபி சந்திப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக சௌந்தரராஜன் (59) என்பவரை கைது செய்து 90 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் பிஎன்ரோடு போயம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டு கொண்டு இருந்த பாண்டி (35), ஜெகன் (32) என 2 பேரை அனுப்பர்பாளையம்  போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல்  செய்தனர்.

Related Stories: