மதவாத சக்திகளை அரசு ஒடுக்க வேண்டும்

சூலூர், செப். 24:   கோவை எம்பி  பி.ஆர். நடராஜன் சூலூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் உள்ள சூலூர், இருகூர், கண்ணம்பாளையம், பள்ளப்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிறு, குறு தொழில்களை காப்பாற்றும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். அரசு மின் கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

 மதவாத சக்திகள் திட்டமிட்ட வன்முறையை தமிழகத்தில் செய்து வருகிறது. அமைதியான தமிழகத்தில் வன்முறையை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து இது நீடிக்குமானால் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதவாத சக்திகளை  ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் நடைபெற்று வரும் அசம்பாவிதங்களுக்கு காரணம் நேற்று நடந்த சோதனைகள் காரணம் அல்ல. ஏற்கனவே இதுபோன்று சொந்தக்கட்சி அலுவலகங்களிலேயே  பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. தற்போது அது குறித்து போலீஸ் விசாரணை  நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: