தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு

பெ.நா.பாளையம்.செப் 24:  கோவை  நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கேஸ் கம்பனி இலட்சுமி திருமண  மண்டபத்தில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நாளை  நடக்கிறது. இதில் அமைச்சர்கள், தமிழ்ஆர்வலர்கள் பங்கேற்கிறார்கள். கோவை  தமிழ்ச்சங்கமம், தமிழ்க்காப்புக் கூட்டியக்கம் சார்பில் நடைபெறும் மாநாடு நாளை  காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.வெளிநாடு, வெளி  மாநிலம், தமிழ்நாடு உட்பட பல இடங்களில் இருந்து சுமார் 4000 தமிழ்  ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் நடத்தப்பட்ட 85  இணைய வழிக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் தேர்வு செய்யப்பட்ட  குழந்தைப் பேச்சாளர்கள் பேசுகின்றனர்.

ஐந்து அமர்வுகளில் நடைபெறும்  மாநாட்டில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  மற்றும் சாந்திலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் சுப்பிரமணியம், தமிழ்ச்சங்கத் தலைவர் துரைசாமி, தமிழ்க்காப்புக் கூட்டியக்கம் தலைவர் அப்பாவு,  அமைப்புச் செயலாளர் இரவீந்திரன், மாநாட்டுப் பொருளாளர் கவிஞர் மணி,  சமூகச்செயற்பாட்டாளர் கனகசுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: