தேசிய அளவிலான தடகளப் போட்டியில் கோவை மாணவன் தங்கம் வென்று அசத்தல்

கோவை, செப்.24: அத்லடிக்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 17வது தேசிய யூத் அத்லெடிக் சாம்பியன்ஷிப்க்கான தடகள போட்டி மத்திய பிரதேசம் போபால் பகுதியில் உள்ள டிடி நகர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், டெக்கல்தான்  பிரிவில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்  12ம் வகுப்பு படிக்கும் அரவிந்த் பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடந்த டெக்கத்லான் போட்டில் மொத்தம் 5392 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். மாணவர் அரவிந்த் கூறியதாவது: கடந்த பல வருடங்களாக தடகளத்தில் பயிற்சி பெற்று வருகிறேன்.

எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியொர் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினர். இந்த தடகளப் போட்டியில் கலல்ந்து கொண்டு வெற்றி பெற நான்  தினமும் பயிற்சி மேற்கொண்டேன். இதன் பலனாக நான் இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளேன். இந்த தங்கப்பதக்கத்தை வென்றதன் காரணமாக எனது பள்ளி சார்பாக ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப்பரிசு கிடைத்தது. 12ம் வகுப்புக்கான பள்ளி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் நடைபெற வுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று நமது நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெறுமை சேர்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: