நாட்டிலேயே முதன்முறையாக கோவை அரசூரில் செல்போன் ஆப் மூலம் இயங்கும் குடிநீர் சப்ளை கருவி

சோமனூர், செப்.24:  கோவை மாவட்டம் அரசூரில் நாட்டிலேயே முதன்முறையாக செல்போன் ஆப் மூலம் குடிநீர் விநியோகிக்கும் கருவி பொருத்தப்பட்டது. கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியில் செல்போன் ஆப் மூலம் குடிநீர் விநியோகிக்கும் புதிய திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படு்த்தப்பட்டுள்ளது. கோட்வால்வு கன்வெட்டர் பொருத்தப்பட்டு செல்போன் ஆப் மூலம் தண்ணீர் விநியோகிப்பவர் எந்த ஊரில் இருந்தாலும் எந்த பகுதிக்கு எவ்வளவு, நீர் எவ்வளவு அழுத்தத்தில் செல்கிறது? எப்போது நிறுத்த வேண்டும்? என்பதை செல்போன் மூலம் கட்டளையிடலாம். இதனால் குடிநீர் விநியோகம் சீராகவும், தங்குதடையின்றியும் கிடைக்கும். இந்த மொபைல் ஆப் மூலம் குடிநீர் விரையம் ஆவது தடுக்கப்படும்.

இந்த கருவியை கோவை கலெக்டர் சமீரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அரசூர் கிராம மேல்நிலைத்தொட்டியில் பொருத்தப்பட்டது. இந்த கருவியை மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா தலைமையில் மாவட் வள மைய அலுவலர் பரணிதரன், கோவை மாவட்ட வளமைய அலுவலர் சூரியபிரியா, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள், ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். பட்டறிவு பயண நிகழ்ச்சியில் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து அரசூர் ஊராட்சித்தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் பேசினார். வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: