பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போராட்டம் எதிரொலி மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு

ஈரோடு, செப்.24: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஈரோட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க ஈரோட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு  மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார், அண்ணா,  கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அம்பேத்கர் சிலைகளுக்கும் போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையம் அருகில் உள்ள காளை  மாட்டு சிலை பகுதி, அரசு மருத்துவமனை ரவுண்டானா, பஸ் நிலையம், வீரப்பன்  சத்திரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கச்சேரி வீதியில்  உள்ள அண்ணா - பெரியார் நினைவகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில், மசூதிகள்,   தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஆர்.என்.  புதூரில் உள்ள மசூதி, நசியனூரில் உள்ள தேவாலயம் ஆகியவற்றிலும் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல,  மாவட்டத்தின் பிற பகுதிகளான பெருந்துறை, கொடுமுடி, பவானி, கவுந்தப்பாடி,  கோபி, சத்தி, பண்ணாரி உள்ளிட்ட பகுதிகளிலும்  700க்கும் மேற்பட்ட போலீசார்  24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

Related Stories: