திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கழிவு வாகனங்கள் 26ம் தேதி பொது ஏலம்

திருச்சி,செப்.24: திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. வருகிற 26ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. எனவே ஏலம் எடுக்க விரும்புவோர் 25 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

 மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 26ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது. ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம்) முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: