×

மாடுகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம்

திருச்சி செப்.24: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் பொன்னனியாறு உபவடி நிலப்பகுதிதிட்டத்தின் கீழ், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அளுந்தூர் கிராம ஊராட்சியில் உள்ள கொட்டப்பட்டு கிராமத்தில் மாடுகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமில் பசுக்களுக்கு இலவசமாக செயற்கை முறை கருவூட்டல், சினை பிடிக்காத மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை, சினை பரிசோதனை, மடிவீக்க நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணி தீவனப்புல் வளர்ப்பு மற்றும் பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் 40 தாது உப்பு கட்டிகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு. எஸ்தர் ஷீலா அறிவுறுத்தலின்படி திருவரங்கம் கோட்ட உதவி இயக்குநர் மரு. கணபதி பிரசாத் முகாமிற்கு தலைமை தாங்கி நடத்தினார். இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் கோமதி, சுப்ரமணியன், கால்நடை ஆய்வாளர்கள் சிவகாம சுந்தரி, செல்வராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் முருகேசன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனா். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை அளுந்தூர் கிராம ஊராட்சித் தலைவர் எமால்டா லிம்ஸி கிரேஸ் ஏற்பாடு செய்திருந்தார். நேற்று நடைபெற்ற முகாமில் சுமார் 250 கால்நடைகளும், 60 கால்நடைகளை வளா்பவர்களும் பயனடைந்தனர்.

Tags :
× RELATED திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்