வந்தவாசி அருகே மாமனார், மாமியாரை தாக்கிய மருமகள் உட்பட 7 பேருக்கு வலை

வந்தவாசி, செப்.24: வந்தவாசி அடுத்த கொடநல்லூர் கிராமத்தில் மாமனார், மாமியாரை தாக்கிய மருமகள் உள்ளிட்ட 7 பேரை போலிசார் வலை வீசிதேடிவருகின்றனர். வந்தவாசி அடுத்த கொடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் வினோத்குமார்(22). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகள் பிரேமா(19) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக திருமணம் நடந்தது. கடந்த 21ம் தேதி அன்று பிரேமாவுக்கும் வினோத்குமாருக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது பிரேமா வினோத்குமாரை தாக்கினாராம். இதனை அறிந்த வினோத்குமாரின் தாய் விமலா என் கண் முன்னே என் மகனை தாக்குகிறாயே என கண்டித்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த பிரேமா தனது உறவினருக்கும் குடும்பத்தினருக்கும் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரேமாவுக்கு ஆதரவாக அவரது தந்தை செல்லக்கண்ணு, தாய் அஞ்சலை, உறவினர்கள் நாகம்மாள், கலா, தமிழரசன், சிலம்பரசன் ஆகிய 7 பேரும் சேர்ந்து வினோத்குமார், விமலா, ஏழுமலை ஆகியோர்களை சரமாரியாக கையாளும் கட்டையாலும் தாக்கி, கத்தியால் தலைமீது வெட்டினார்களாம். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories: