அண்ணாமலையார் கோயிலில் கிரிக்கெட் வீரர் லட்சுமணன் தரிசனம்

திருவண்ணாமலை, செப்.24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன். ஐதராபாத்தை சேர்ந்த இவர், டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தனக்கென தனி முத்திரை பதித்தவர். இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் நேற்று தனது குடும்பத்தினருடன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் நடந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், அம்மன் சன்னதி எதிரில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் அவருக்கு, கோயில் சார்பில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். பின்னர், ரமணாஸ்ரமத்தில் தரிசனம் செய்த அவர், அதைத்தொடர்ந்து காரில் கிரிவலம் சென்று வழிபட்டார்.

Related Stories: