திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம்

திருவண்ணாமலை, செப்.24: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து, அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட கண்காணிப்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓக்கள் வெற்றிவேல், தனலட்சுமி, வினோத்குமார், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து துறைவாரியாக ஆய்வு நடத்தினார்.

அப்போது, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடப்பு நிதி ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளின் விவரம் குறித்து ஆய்வு செய்தார். ஒவ்வொரு திட்டத்தின் முன்னேற்றம், அதற்கு ஒதுக்கப்பட்ட அரசு நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா, அரசு வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில், அரசு அறிவித்துள்ள திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும், உரிய இலக்குகளை அடைய வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்ற அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், ஓட்டுநர் பயிற்சி மைதானம், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் போன்ற பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது, கலெக்டர் பா.முருகேஷ், டிஆர்ஓ பிரியதர்ஷினி, வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரா, ேமாட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி உளளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், போளூர் தாலுகா, குருவிமலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, போளூர் தாலுகா அலுவலகம், போளூர் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்கெட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மேலும், ஆரணி தாலுகா அரியபாடி கிராமத்தில் நடைபெறும் வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் பணிகளை ஆய்வு செய்தார்.

Related Stories: