அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் ரூ.10 நாணயம் பெற மறுக்கும் வங்கி, வர்த்தக நிறுவனங்கள்

அரவக்குறிச்சி, செப். 24: அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் பத்து ரூபாய் நாணயம் பெற்றுக் கொள்ள வங்கி உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்கள் மறுக்கின்றன என புகார் எழுந்துள்ளது. பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்ற விழிப்புணர்வு அறிவிப்பை மாவட்டம் நிர்வாகம் வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பத்து ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு பல ஆண்டுகளாக புழக்கத்திலுள்ளது. ரூபாய் நோட்டுக்களைப் போல நாணயங்கள் சீக்கிரம் அழியாது என்பதால் நாணயங்கள் வெளியிடப்படுகின்றது. ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் என நாணயங்கள் வெளியிடப்பட்டு புழக்கத்திலுள்ளது. பத்து ரூபாய் நாணயம் தவிர மற்ற நாணயங்களை அனைத்து தரப்பு மக்களும் கொடுக்கல் வாங்கலுக்கு உபயோகத்தில் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

என்ன காரணத்தினாலோ மற்ற நாணயங்களை விட பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்கள், பேருந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இதனால் பொதுமக்களும் மற்றவர்களிடம் கொடுக்கல் வாங்கலுக்கு பெற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்கள் உபயோகிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பள்ளபட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் பேருந்து நடத்துனர்கள்,ரயில் நிலையங்கள்,வங்கிகள் குறித்து புகார் அளிக்க வேண்டும். இதில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

மாவட்டத்தில் எந்த வங்கி வாங்க மறுக்கிறதோ அதுகுறித்து கரூரில் உள்ளத தலைமை வங்கியிடம் (லீட் பேங்க்)புகார் அளிக்கலாம். வாங்க மறுக்கும் வங்கி ஊழியர்களிடம் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று நீங்களே எழுதி தாருங்கள் என்று கேட்கலாம். அல்லது செல்போனில் படம் பிடித்து புகார் அளிக்கலாம் . வங்கிகளில் வாங்க மறுத்தால் புகார் அளியுங்கள் என்று லீட் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் இந்த நடைமுறைக்கு பலனில்லை என்று கூறுகின்றார். அரவக்குறிச்சி பள்ளபட்டி பகுதியில் பத்து ரூபாய் நாணயம் பெற்றுக் கொள்ள வங்கி உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்கள் மறுக்கின்றன என புகார் எழுந்துள்ளது. பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்ற விழிப்புணர்வு அறிவிப்பை மாவட்டம் நிர்வாகம் வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: