வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில், சாராயம் பறிமுதல்

கடலூர், செப். 24:  கடலூர் - புதுச்சேரி எல்லை ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தங்கதுரை தலைமையில் அதிகாரிகள் காரில் கடத்தி சென்ற மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் கடலூர் மஞ்சக்குப்பம் அருகே உள்ள ஆல்பேட்டை சோதனை சாவடியில், புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுகிறதா என்று தினமும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் உடன் சேர்ந்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தங்கதுரை தலைமையில், மாவட்ட உதவி மேலாளர்கள் ஜெயக்குமார், தேவகண்ணன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மற்றும்

ஆட்டோக்களில் கடத்திவரப்பட்ட 20 மதுபாட்டில்கள், 30 சாராய பாக்கெட்டுகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

Related Stories: