அரசு உண்டு உறைவிட பள்ளியை நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர், செப். 24: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்ட நல்லூர் ஒன்றியம் பெரியநெசலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளியை பொறுப்பேற்று நடத்துவதற்கு பதிவு பெற்ற தகுதி வாய்ந்த அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பங்கள் 26.09.2022 முதல் 30.09.2022 வரை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை வழங்கப்படும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 3ம்தேதி, மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள் கீழ் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அப்பதிவு அவ்வப்போது புனரமைப்பு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். தமிழக மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க கூடாது. தொண்டு நிறுவனங்கள் அந்நிறுவனத்தின் பெயரில் 80பி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியில் விண்ணப்ப படிவங்கள் பெறுதல் மற்றும்

சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Related Stories: